பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இதுகுறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் கூறுகையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இல்லாமல் அரசாங்கத்தை நடத்த முடியாது. அவர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் இப்போது புதிய ஆட்களை எடுப்பதாக அரசு கூறுகிறது. நிலுவைதொகையை தருவது தொடர்பாக அரசு அழைத்துப்பேசினால் தீர்வு கிடைக்கும். பணம் இல்லாத அரசு எப்படி தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பார்கள்⁉. இந்நிலையில் இப்பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி இன்று மாலை, 4 மணிக்கு சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கலந்து கொள்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இதன் பிறகும் அரசு போராட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று பேட்டி அளித்துள்ளார்
ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவு தெரிவித்து போக்குவரத்து தொழிலாளர்கள் எச்சரிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment