பிரதமர் மோடியை தவறாக சித்தரித்ததாக கூறி மதிமுக பிரமுகர் கைது - Agnipuratchi

பிரதமர் மோடியை தவறாக சித்தரித்ததாக கூறி மதிமுக பிரமுகர் கைது

Share This

கடந்த ஞாயிற்று கிழமை பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மதிமுக தொண்டர்கள் கறுப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கறுப்பு பலூன்களும் பறக்க விடப்பட்டன. இதேபோல் சமூகவலைதளங்களிலும் கோபேக்மோடி என்ற வாசகங்கள் பகிரப்பட்டன. இதன் ஒரு பகுதியாக சீர்காழியை சேர்ந்த மதிமுக நகர செயலாளர் சத்தியராஜ் பாலு மோடி குறித்து முகநூலில் அவதூறு படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்து சீர்காழி பாஜக நகரத் தலைவர் சுவாமிநாதன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், சத்தியராஜ் பாலு கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages