சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு - Agnipuratchi

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Share This

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சன் தொலைக்காட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல் மூலம் 700க்கும் மேற்பட்ட அதிவேக தொலைபேசி இணைப்புகளை வழங்கியதாக, தயாநிதிமாறன், கலாநிதி மாறன் உள்பட 7 பேர் மீது முறைகேடாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி சி.பி.ஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள் தேவைக்கும் அதிகமாகவே உள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்ததை நீதிபதி கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் புதிதாக குற்றச்சாட்டு பதிவுக்காக வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதாக தெரிவித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கோரிக்கை குறித்து அன்று பரிசீலிக்கபடும் என தெரிவித்தார். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரும் வரும் 30ஆம் தேதி நேரில் ஆஜராகவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages