கரும்பு நிலுவை தொகை கேட்டு மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் போராட்டம் - Agnipuratchi

கரும்பு நிலுவை தொகை கேட்டு மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் போராட்டம்

Share This

விருத்தாச்சலம் பாலக்கரையில் கரும்புக்கான நிலுவை தொகை வழங்க கோருதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7ம் தேதியிலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் விருத்தாசலம் பாலக்கரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விருத்தாச்சலம் சப்கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் கவியரசு ஆகியோர் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதன்படி நேற்று காலை விவசாயிகள் மண்டையோடு மற்றும் மனித எலும்புகளையும் வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தனியரசு தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages