ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளியைக் கொன்று, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் ஜாமீனில் உள்ள மனோஜ், சயன் ஆகியோர் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராகப் புகார்களைக் கூறி வருவதால்அவர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிக் காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்த உதகை நீதிமன்றம், சயான், மனோஜ் ஆகியோர் ஜனவரி 29ஆம் நாள் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனோஜ், சயன் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டைக் கேட்ட நீதிபதி, மனு தாக்கல் செய்தால், திங்கட்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்படும் எனத் தெரிவித்தார்.
உதகை நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை-சயன், மனோஜ் மனு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment