பள்ளிகரணை குப்பை கிடங்கில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு - Agnipuratchi

பள்ளிகரணை குப்பை கிடங்கில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

Share This

கடந்த 4 நாட்களுக்கு முன் பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் பெண்ணின் ஒரு கையும், இரண்டு கால்களும் மட்டும் கிடந்தன. கொலையான பெண் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் ராம லிங்கம், நரேந்திரன், எழில் கோதை ஆகியோர் கொண்ட குழு பிரேதப்பரிசோதனை நடத்தியது. இதனையடுத்து, மருத்துவமனையில் பெண்ணின் திசு சேகரிக்கப்படும் என்றும், அந்த உடலின் பிற பாகங்கள் கிடைத்தால் சேகரித்த திசுவைக் கொண்டு இதே உடலுடன் சேர்ந்ததா❓இல்லை வேறு உடலா என அடையாளம் காணப்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். மேலும், கை, கால்கள் துண்டாக்கப்பட்ட போது உயிர் பிரிந்துவிட்டதா❓அல்லது உயிரோடு துடிக்க வெட்டப்பட்டதா❓கொல்லப்பட்ட நேரம் எப்போது என்பதையும் பிரேதப்பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வரும். எலும்பு மற்றும் தசை மாதிரிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages