இ.சேவை மையங்களில் வில்லங்கச்சான்று பெறும் வசதி - Agnipuratchi

இ.சேவை மையங்களில் வில்லங்கச்சான்று பெறும் வசதி

Share This

வில்லங்கச்சான்று கடந்த 1.1.1975ம் ஆண்டு முதல் தற்போது வரை கணினிமயமாக்கப்பட்டு இணையதளம் மூலம் வழங்கப்படுகிறது. இந்த கணினிமயமாக்கப்பட்ட காலத்துக்கு உட்பட்ட வில்லங்கச்சான்று மற்றும் சான்றிட்ட ஆவணநகல் கடந்த 2ம் தேதியில் இருந்து இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வில்லங்கச்சான்று மற்றும் சான்று ஒப்ப ஆவண நகல் பெற சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் நிலை அறவே தவிர்க்கப்பட்டுள்ளது. அரசு இ.சேவை மையங்களுக்கு சென்று வில்லங்கச்சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல் விண்ணப்பிக்கும் வசதிக்கான மென்பொருள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வசதி விரைவில் அமலுக்கு வரவிருக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages