இரு மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு - அஸ்வின் விளையாடுவாரா - Agnipuratchi

இரு மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு - அஸ்வின் விளையாடுவாரா

Share This

சிட்னியில் நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4வது போட்டிக்கான 13 பேர் கொண்ட இந்திய அணி மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் எப்படியாவது வென்று தொடரை சமன் செய்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அதேசமயம், இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வென்றுவிட வேண்டும், அல்லது குறைந்தபட்சம் டிரா செய்ய வேண்டும் என்ற தீவிரத்தில் இருக்கிறது.

கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாகப் பந்து வீசி  11விக்கெட்டுகளை வீழ்த்திய இசாந்த் சர்மா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா தனது மனைவிக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர்களைப் பார்க்க மும்பை சென்றுவிட்டதால், அவர் 4 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக கே.எல். ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்வின் உடற்தகுதியில் இன்னும் முழுமையாகத் தேர்வாகவில்லை என்பதால், நாளை விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் கடைசி நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages