பொங்கல் பரிசுத்தொகைக்கு தடை விதிப்பு மேல்முறையீடு செய்யப்படும் -கடம்பூர் ராஜு - Agnipuratchi

பொங்கல் பரிசுத்தொகைக்கு தடை விதிப்பு மேல்முறையீடு செய்யப்படும் -கடம்பூர் ராஜு

Share This

விருதுநகரில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பொங்கலுக்கு வெளியிடப்படும் பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. கூடுதல் கட்டணம் குறித்து புகார் எழுந்தால் முதல் இருமுறை அபராதமும் 3 வது முறை திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும். திரை அரங்கங்களில் அதிக கட்டணம் வசூலித்தால் முதற்கட்டமாக ரூ.50,000 அபராதம், 2-வது கட்டமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages