முன்னதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று எச்சரித்து வழக்கு விசாரணையை இன்று 9ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. அதன்படி, இது குறித்த விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று பொன். மாணிக்கவேல் குற்றம் சாட்டினார். பின்னர் பேசிய நீதிபதிகள், பொன். மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து 50 நாட்களாகியும் இன்னும் ஒரு அலுவலகம் கூட வழங்காததைக் கண்டித்தனர். மேலும், சிலை கடத்தல் தடுப்பு வழக்கை தமிழக அரசு கையாளுவதை பார்க்கும் போது, நீதித்துறை கடும் நெருக்கடியில் இருப்பதாக அறிவிக்க கூடும் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதித்துறை நெருக்கடியில் உள்ளதாக அறிவிப்போம்-உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment