விதியை மீறியதால் போத்தீஸ் ஜவுளி கடைக்கு சீல் - Agnipuratchi

விதியை மீறியதால் போத்தீஸ் ஜவுளி கடைக்கு சீல்

Share This

நாகர்கோவில் நகராட்சியின் உள்ளூர் திட்டக்குழுமத்திடம் 5 மாடி கட்டிக் கொள்ள வரைபட அனுமதி பெற்றுவிட்டு, விதியை மீறி 7 மாடி கட்டிடம் கட்டிக் கொண்டதாகவும், வாகன நிறுத்துமிடம் என்று அனுமதி பெற்ற இடத்தில் காய்கறி கடை அமைத்ததாகவும் போத்தீஸ் ஜவுளிக்கடையின் விதிமீறல்கள் குறித்த புகார்கள் தொடர்ந்து வந்தது. அந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனத்தை நிறுத்த போதிய இடம் இல்லாததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ந்தேதி, போத்தீஸ் ஜவுளிக் கடையை பூட்டி சீல்வைக்க உள்ளூர் திட்டகுழும அதிகாரி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போத்தீஸ் நிறுவனம் இடைக்கால தடையாணை பெற்றதால் கடைக்கு சீல் வைக்கப்படவில்லை. இந்த நிலையில் இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது போத்தீஸ் ஜவுளிக் கடையின் விதிமீறல் உறுதி செய்யப்பட்டதால் இடைக்கால தடை விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சென்று போத்தீஸ் ஜவுளிக்கடையில் உள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்து சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages