கொடநாடு விவகாரம்-சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு - Agnipuratchi

கொடநாடு விவகாரம்-சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

Share This

கொடநாடு கொலை, கொள்ளை தொடா்பாக பத்திரிக்கையாளா் மேத்யூ சாமுவேல் வெளியிட்டுள்ள பிரத்யேக வீடியோவில் முதல்வா் பழனிசாமி மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இதனைத் தொடா்ந்து வழக்கில் தொடா்புடைய சயான் மற்றும் மனோஜ் நேற்று டெல்லியில் கைது செய்யப்பட்டு இன்று சென்னை கொண்டு வரப்பட்டனா். இவா்கள் இருவரும் எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா். அதில், "கொடநாடு விவகாரத்தில் முதல்வா் மீதே குற்றம் சாட்டியுள்ள நிலையில் தமிழக காவல்துறை இந்த வழக்கை விசாரித்தால் விசாரணை முழுமையாக நடைபெற வாய்ப்பில்லை. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages