மதுரை வந்த பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டி சிறப்புறை ஆற்றினார் பிரதமர் மோடி - Agnipuratchi

மதுரை வந்த பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டி சிறப்புறை ஆற்றினார் பிரதமர் மோடி

Share This

மதுரை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அவர் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவைத் தொடர்ந்து பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. இவரின் வருகையை ஒட்டி மதுரை நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் விழா மேடையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனைத் தொடா்ந்து தமிழக அரசு சாா்பில் இடம் தோ்வு செய்யப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டம் தோப்பூா் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகின்றது. இந்த மருத்துவமனைக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினாா். மேலும் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூாி மருத்துவமனைகளில் தலா 150 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட அதிநவீன பல்னோக்கு சிகிச்சை பிரிவு கட்டிடங்களையும், சிறப்பு மருத்துவ உபகரணங்களையும் பிரதமா் மோடி நாட்டிற்கு அற்பணித்தாா்.

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் நாட்டின் நான்கு திசைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சேவையில் தனி இடம் வகித்து வருகின்றது' என்று தெரிவித்தார் மோடி. இதனை தொடர்ந்து மதுரை மக்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் என தமிழில் பேசி தன் உரையை தொடங்கிய பிரதமர் மோடி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒவ்வொரு மாநிலங்களிலும் எய்ம்ஸ் அமைக்கப்படும். மதுரை, தஞ்சை, நெல்லையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ பிரிவை தொடங்கியதில் மகிழ்ச்சி. மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கிய ஒரு மாதத்தில் ரூ.200 கோடி மதிப்பில் மருத்துவ சேவை செய்யப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீடு திட்டத்தில் தமிழகத்தில் ஒரு மாதத்தில் சுமார் 89,000பேர் சிகிச்சை பெற விண்ணப்பம் செய்துள்ளனர்" என்று பேசினார். அவர் பேசிய வீடியோ பதிவு இதோ

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages