அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் ❗ - Agnipuratchi

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் ❗

Share This

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன், 4 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அங்கன்வாடிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மாநில அளவில் 2 ஆயிரத்து 381 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன், அருகருகே உள்ள அங்கன்வாடிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பள்ளி வளாகங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்கி சிறுவர், சிறுமியரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்க்கென கூடுதலாக ஆசிரியர்களை நியமனம் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனையடுத்து வருகின்ற 21ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள அரசினர் மாநில மகளிர் பள்ளியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்கி வைக்கவுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages