உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்து வேதாந்த நிறுவனம் ஆலையை திறக்க மின் இணைப்பு வழங்க கோரி தமிழக அரசுக்கு மனு தாக்கல் செய்தது. ஆனால் தமிழக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே, மீண்டும் இதுகுறித்து வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் ஆலையை உடனடியாக திறக்க மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவினை பிறப்பித்தது. இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், வேதாந்தா நிறுவனம் பொய்யான தகவல் மூலம் ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது என்றும் வேதாந்தா நிறுவனம் தமிழக அரசிடம் தந்த கோரிக்கையும், உச்சநீதிமன்றத்தில் வைத்த கோரிக்கையும் வேறு மாதிரியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், உரிய நடைமுறைகளை பின்பற்ற வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும், அதை போல தவறான தகவல்களை கொடுத்து உரிய நடைமுறைகளை பின்பற்ற வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தமிழக அரசு கோரியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்டர்லைட் விவகாரம்-உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment