சிபிஐ புதிய இயக்குனருக்கான பெயர்கள் பரிந்துரை - Agnipuratchi

சிபிஐ புதிய இயக்குனருக்கான பெயர்கள் பரிந்துரை

Share This

சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா ராஜினாமா செய்திருப்பதை அடுத்து, 4ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் அப்பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் மும்பை காவல்துறை ஆணையர் சுபோத்குமார் ஜெய்ஸ்வால் மற்றும் உத்தரப் பிரதேச டி.ஜி.பி. ஓ.பி.சிங் ஆகியோரின் பெயர்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற சிறப்புக் குழு கூட்டத்திற்குப் பின், அலோக் வர்மாவை சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து விடுவித்து, தீயணைப்புத் துறை இயக்குனராக மாற்றப்பட்டார். இந்த பொறுப்பில் ஒருநாள் கூட பணியை ஏற்க மறுத்துவிட்ட அலோக் வர்மா மத்திய அரசுக்கு தமது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages