மம்தா தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்-எதிர்க்கட்சிகள் பங்கேற்றனர் - Agnipuratchi

மம்தா தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்-எதிர்க்கட்சிகள் பங்கேற்றனர்

Share This

கொல்கத்தாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கட்சிகள் ஒன்றினையும் ஐக்கிய இந்திய பொதுக்கூட்டம் இன்று துவங்கியது. இந்த பொதுக்கூட்டமானது மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கிறது. இதனையடுத்து, கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தில், சரத் பவார், தேவேகவுடா, மல்லிகார்ஜூன கார்கே, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, அரவிந்த் கெஜ்ரிவால், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பா.ஜனதா அதிருப்தி தலைவர்கள் யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா, அருண்ஷோரி, ராம்ஜெத் மலானி ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தலைவர்கள் பேசுவதற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அனைவருக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் சென்று சேரும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி தொலைக்காட்சித் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில், தலைவர்கள் சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள் என்று தெரிகிறது. மேலும், எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களுக்குள் பேசி ஒருமித்த கருத்துக்கு வர உள்ளனர். ஒருமித்த கருத்து உருவாகாவிட்டால் பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி என்பது கைகூடாமல் போக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் மம்தா பானர்ஜி தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages