சென்னை ஏரிகளை தூர்வாரி பலப்படுத்த 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு - Agnipuratchi

சென்னை ஏரிகளை தூர்வாரி பலப்படுத்த 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Share This

சென்னையின்  குடிநீர் தேவைகளை கருத்தில் கொண்டு ஏரிகளை தூர்வார தமிழக அரசு 15 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "பூண்டி ஏரியை தூர் வார 10 கோடியே 98 லட்ச ரூபாயும், செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வார 4 கோடியே 3 லட்சத்து 27,900 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளின் கீழ், பூண்டி நீர்த்தேக்கத்தின் நந்தி மற்றும் நகரி கால்வாய்கள் மேம்படுத்தப்படும், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் தரும் கேசவரம் அணைக்கட்டை மேம்படுவதோடு, பூண்டி நீர்த்தேக்கத்தின் கரைகளும் பலப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் பங்காரு கால்வாயை தூர் வாருவதோடு, நீர்தேக்கமும் தூர்வாரி கரைகளும் பலப்படுத்தப்படும் என்றும். இதன் மூலம் 2 டி.எம்.சி. அதிக நீரை கூடுதலாக தேக்கி வைக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages