2016க்கு பின் தமிழகத்தில் எத்தனை டாஸ்மாக் மூடப்பட்டுள்ளன - உயர்நீதிமன்ற மதுரை கிளை - Agnipuratchi

2016க்கு பின் தமிழகத்தில் எத்தனை டாஸ்மாக் மூடப்பட்டுள்ளன - உயர்நீதிமன்ற மதுரை கிளை

Share This

டாஸ்மாக் விற்பனை நேரத்தை பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற வேண்டும் என ஐகோர்ட் கிளையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் முன் நடைபெற்றது. அப்போது 2016ம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன, தற்போது எத்தனை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் உள்ளன என அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனரை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மதுவுக்கு அடிமையானவர்கள் அதிகம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages