சென்னை விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல் - Agnipuratchi

சென்னை விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல்

Share This

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, சுங்க அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னையை சேர்ந்த 3 பேரும், ராமநாதபுரத்தை சேர்ந்த 4 பேரும் திரும்பி வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதிலளித்துள்ளார்கள். பின்னர் 7 பேரையும் அதிகாரிகள் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்த போது, உடலுக்குள் சிறு சிறு தங்க கட்டிகள், தங்க சங்கிலி ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மருத்துவர்கள் உதவியுடன் அவை வெளியே எடுக்கப்பட்டது. அதன்படி, அவர்களிடம் இருந்து ரூ.29 லட்சம் மதிப்புள்ள 870 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்த 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages