ஆந்திராவில் முழு அடைப்பு-சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிக்கை - Agnipuratchi

ஆந்திராவில் முழு அடைப்பு-சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிக்கை

Share This

நேற்று ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து, அந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து நிதி ஒதுக்க வேண்டும், தேசிய கல்வி நிறுவனங்கள் அமைத்துத்தர வேண்டும், ஆந்திர தலைநகர் அமராவதி கட்டமைப்புக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனையடுத்து இன்று சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages