சென்னை மெட்ரோ மற்றும் நாட்டின் 2வது தேஜஸ் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார் பிரதமர். - Agnipuratchi

சென்னை மெட்ரோ மற்றும் நாட்டின் 2வது தேஜஸ் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார் பிரதமர்.

Share This

வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் -டி.எம்.எஸ் தேனாம்பேட்டை வரையிலான சுரங்க வழித்தடத்தில் இறுதிக்கட்ட மெட்ரோ பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பயணிகள் ரயில் போக்குவரத்து வருகிற 10ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் திருப்பூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்தவாறு காணொலி காட்சி மூலம் கொடியசைத்து மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். இதே விழாவில் சென்னை - மதுரை இடையேயான நாட்டின் 2வது தேஜஸ் சொகுசு ரயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages