சபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் - Agnipuratchi

சபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Share This

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. ஆனால் காலம் காலமாக சபரிமலையில் கடைபிடிக்கப்படும் ஐதீகத்தை மீறி இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும் கேரளாவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது மாசி மாத பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று பகல் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 இளம்பெண்கள் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்யச் சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்துவதால் அங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர்களிடம் எடுத்துக் கூறினார்கள். போலீசாரின் அறிவுரையை ஏற்று அந்த 4 இளம்பெண்களும் திரும்பிச் சென்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages