சிமெண்ட் விலை உயர்வை குறைக்க கட்டுமானத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை - Agnipuratchi

சிமெண்ட் விலை உயர்வை குறைக்க கட்டுமானத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

Share This

சிமெண்ட் விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கட்டுமானத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய அந்த சங்கத்தின் தலைவர் தயாநிதி, ஏற்கனவே மணல், கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் சிமெண்ட் விலையும் அதிகரித்துள்ளதால், கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்கள் தங்கள் தொழிலை விட்டே வெளியேறும் நிலையில் உள்ளதால், அரசு இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages