கோடநாடு வழக்கு-சயான், மனோஜை கைது⛓ செய்ய தடை - Agnipuratchi

கோடநாடு வழக்கு-சயான், மனோஜை கைது⛓ செய்ய தடை

Share This

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத மனோஜ், சயான் ஆகியோரது ஜாமீனை உதகை நீதிமன்றம் ரத்து செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சயான் மற்றும் மனோஜ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதன் விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க அவர்கள் இருவரும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் காவல்துறை தரப்பில் கொலை கொள்ளை வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த இருவரும் முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களுடன் பேட்டியளிப்பதாக வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காவல்துறை பதில்மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வருகிற 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை மனோஜ், சயான் ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கோத்தகிரி காவல்துறைக்கு நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages