மக்கள் நீதி மைய்யம்' கூட்டணி குறித்து கமல்ஹாசன் அதிரடி பேட்டி - Agnipuratchi

மக்கள் நீதி மைய்யம்' கூட்டணி குறித்து கமல்ஹாசன் அதிரடி பேட்டி

Share This

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிடும் சூழ்நிலையில் உள்ளது. மேலும் இந்த கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கும் எனத்தெரிகிறது. ரஜினிகாந்த் இந்த தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது கூட்டணி அமைத்து கறை பட விரும்பவில்லை. எனவே, 4⃣0⃣ தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும். 4⃣0⃣ தொகுதியிலும் யார் வேட்பாளர்கள் என்பதை விரைவில் அறிவிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages