சென்னையில் அத்துமீறும் போலீஸ்-கால்டாக்சி ஓட்டுனர்கள் நடு இரவில் மறியல் - Agnipuratchi

சென்னையில் அத்துமீறும் போலீஸ்-கால்டாக்சி ஓட்டுனர்கள் நடு இரவில் மறியல்

Share This

பள்ளிகரணை-வேளச்சேரி சாலையில் வேளச்சேரி மேம்பாலம் அருகே ரஞ்சித் என்பவர் ஓட்டி வந்த டாக்சியும், போலீஸ் வாகனமும் ஒன்றை ஒன்று மோதுவதை போல வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரோந்து வாகனத்தில் சென்ற காவலர் மகாவீர் என்பவர், கால் டாக்ஸி ஓட்டுநர் ரஞ்சித்தை கடுமையாக அவதூறாக பேசியயுள்ளார். சம்பவத்தை நேரில் கண்ட மற்றொரு டாக்சியை ஓட்டி வந்த டேவிட் என்ற டிரைவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ரஞ்சித்தை மகாவீர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரஞ்சித், காவலர்களிடம் ஏற்பட்ட மோதல் குறித்து தனது கார் ஓனரிடம் போனில் தெரிவித்ததற்கு நீ யாரை வேண்டுமானாலும் கூப்பிடு, என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டியதாக பேட்டியளித்துள்ளார். இதனையடுத்து 100க்கும் மேற்பட்ட டாக்சி ட்ரைவர்கள் ஒன்று கூடி நள்ளிரவு 1 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, மகாவீர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னரே போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றுள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages