பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சேலத்தில் போராட்டம் - Agnipuratchi

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சேலத்தில் போராட்டம்

Share This

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், பேச்சுவார்த்தை நடத்தியும், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தகட்ட போராட்டத்தை துவக்க போவதாக கூறிய விவசாயிகள் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தியதோடு, பால் உற்பத்தியாளர்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்யவில்லை என குற்றம் கூறியுள்ளனர். எனவே, பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரியும், மாடுகளுக்கு அளிக்கக்கூடிய கால்நடை தீவனங்களுக்கு 50% மானியத்தை அரசு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages