வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்திற்கு புதிய கட்டுப்பாடு-மசோதா தாக்கல் - Agnipuratchi

வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்திற்கு புதிய கட்டுப்பாடு-மசோதா தாக்கல்

Share This

கடந்த ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள், திருமணத்திற்கு பிறகு கொடுமைப்படுத்தியதாக உச்சநீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். மேலும் இது தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளில், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு சுமார் 4,300 புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய மசோதாவை மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய பெண்ணை திருமணம் செய்தால் திருமணமாகி 30 நாட்களுக்குள் அதனை பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அவர்களின் பாஸ்போர்ட் திரும்ப பெறப்படும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages