திருவிழாவில் அனுமதியின்றி எருதுவிடும் நிகழ்ச்சி - காவல்துறை, பொதுமக்களிடையே மோதல் - Agnipuratchi

திருவிழாவில் அனுமதியின்றி எருதுவிடும் நிகழ்ச்சி - காவல்துறை, பொதுமக்களிடையே மோதல்

Share This

ஓசூரை அருகே மதகொண்டப்பள்ளி பஸ்கர வெங்கடரமண சுவாமி கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு இன்று எருது விடும் விழா நடைபெற்றது. முறையாக ❌அனுமதி பெறாமல் நடைபெற்ற இந்த எருதுவிடும் விழாவில், 500க்கும் மேற்பட்ட காளைகளும், 5 ஆயுரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் பங்கேற்றனர். இதனையடுத்து அங்கு வந்த ♂காவல்துறையினர், எருது விடும் விழாவை நிறுத்திவிட்டு அனைவரையும் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினார். அப்போது இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் சிலர் காவல்துறையின் மீது கற்களை வீசியதில் காவல்துறையினர் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டது. மேலும் காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தடியடி நடத்தி காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages