மக்களவைத் தோ்தல் வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில் திடீரென தீவிர அரசியலில் இறங்கிய பிரியாங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்து கடந்த 23ம் தேதி அக்கட்சி உத்தரவிட்டது. இதனைத் தொடா்ந்து அவா் நேற்று கட்சியின் பொதுச் செயலளராக பொறுப்பேற்றுக் கொண்டாா். மக்களவைத் தேர்தலில் வெற்றியை தீா்மானிக்கும் முக்கிய மாநிலமாக விளங்கும் உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதியை ராகுல் காந்திக்கு அக்கட்சி வழங்கி உள்ளது. இந்த பகுதியில் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத் தரும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி இன்று முக்கிய கூட்டம் ஒன்றை நடத்துகிறாா். அந்த கூட்டத்தில் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி, மாநில பொறுப்பாளா்கள் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரசின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றாா் பிரியங்கா
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment