திருப்பூரில் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது பிரதமர் மோடி வரும் 10ம் தேதி திருப்பூருக்கு வருகை தரவுள்ளார். இதையொட்டி பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர் 19ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தரவுள்ளார். பிரதமரைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திருநெல்வேலிக்கு வருகிறார். மேலும் பாஜக தலைவர் அமித் ஷா வரும் 14ம் தேதி ஈரோடு வருகிறார். பாஜக அரசு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது . இம்முறை தலைநிமிர்ந்து வாக்கு கேட்போம். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மூலம் சாமானிய மக்களின் வீடு வாங்கும் கனவு நிறைவேற உள்ளது" என்று அவர் கூறினார். மேலும் சாரதா சிட் பன்ட்ஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தாவில் விசாரிக்க சென்றனர் என்று தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.
பிரதமரை தொடர்ந்து தமிழகம் வருகிறார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment