சென்னை ஐஐடி கல்லூரி மாணவர்களுக்குள் நடந்த மோதல்-ஒருவருக்கு கத்திக்குத்து - Agnipuratchi

சென்னை ஐஐடி கல்லூரி மாணவர்களுக்குள் நடந்த மோதல்-ஒருவருக்கு கத்திக்குத்து

Share This

சென்னை ஐஐடி தொழில்நுட்பக் கல்லூரியின் மைய நூலகம் அருகேவுள்ள பகுதியில் ஹரியானாவை சேர்ந்த மாணவர்கள் கௌஷிக் மற்றும் மனோஜ் என்பவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பு வரை சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மாணவர் மனோஜ் கூர்மையான ஆயுதத்தால் கௌஷிக் வயிற்றில் குத்தி விட்டு சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டார். இதனால் வலி ஏற்பட்டு, மாணவர் கௌஷிக் ரத்த வெள்ளத்தில் அப்படியே சாய்ந்து மயங்கினார். உடனே அருகிலிருந்த சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மனோஜை தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages