சென்னை 🕉இந்து ஆன்மிக கண்காட்சியில் அலைமோதிய கூட்டம் - Agnipuratchi

சென்னை 🕉இந்து ஆன்மிக கண்காட்சியில் அலைமோதிய கூட்டம்

Share This

இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை சார்பில், சென்னை, வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 10-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடந்து வருகிறது. இதில் 6 பண்புகளில் ஒன்றான ‘சுற்றுச்சூழலை காக்கும் வகையில் ‘கங்கா வந்தனம்- பூமி வந்தனம்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இளையதலைமுறையினர் முழுமையாக இதனை கடைப்பிடிக்கும் வகையில் 1,008 பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக 2 சிறிய மண்பானையில் தண்ணீரும், மண்ணும் வைத்து பூக்களால் அர்ச்சனை செய்து, ‘கங்கா வந்தனம், பூமி வந்தனம்’ பூஜை செய்தனர். இன்றைய நிகழ்ச்சியில் பாரத தாய் மற்றும் தாய் நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து போராடிய வீரர்களை வணங்கும் ‘பரம் வீர் வந்தனம்’ நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாலை 3.15 மணிக்கு குறும்பர் பழங்குடியினரின் பாரம்பரிய சடங்கு முறைகளும், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகமும், இரவு 6 மணிக்கு நாட்டுப்பற்று சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages