ஜெயலலிதா பிறந்த நாள் -பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு - Agnipuratchi

ஜெயலலிதா பிறந்த நாள் -பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

Share This

சாலை விதிமீறல், பேனர்களுக்கு எதிரான வழக்குகளில் சாலைகளில் பேனர்கள் வைக்க நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24ம் தேதி பேனர்கள் வைக்க அனுமதி கோரி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பாலகங்கா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை நிராகரித்த நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்றனர். அப்போது தமிழகம் முழுவதும் சட்டவிரோத பேனர்களை அகற்றுவது தொடர்பாக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோத பேனர்களை அகற்றுவது மட்டுமன்றி தடுப்பதும் அரசின் கடமை என்ற நீதிபதிகள், அரசின் அறிக்கை திருப்திகரமாக இல்லை என்றும் புதிதாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages