பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவோரின் செல்போனை பறிமுதல் குறித்து உயர்நீதிமன்றம் - Agnipuratchi

பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவோரின் செல்போனை பறிமுதல் குறித்து உயர்நீதிமன்றம்

Share This

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓடுவதால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது என சுட்டிக்காட்டியிருந்தார். அத்தோடு வாகன விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கான அபராதத்தை 10,000 ரூபாயிலிருந்து 1 லட்சமாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இன்று இந்த மனு மீதான விசாரணை வந்தபோது, போக்குவரத்து விதிமீறல் பற்றி புகார் அளிப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது குறித்து டிஜிபியிடம் தகவல் பெற்று அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை பறிமுதல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது⁉எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages