கடற்பசு, கடல்குதிரை, பால்சுறா, கடல் அட்டை உள்ளிட்ட 53 வகையான அரிய 🌊கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்கவும், வைத்திருக்கவும் 🏛மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை🚫 விதித்துள்ளது. எனினும், இத்தடைகளை மீறி🙄 பலவித மருந்துகள்💊 தயாரிப்பதற்காக கடல் அட்டைகளைப் சட்டவிரோதமாகப் பிடித்து உயிருடனும், பதப்படுத்தியும் கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது😟. இதைத் தடுக்கும் பணியிலும் வன உயிரினப் 💪பாதுகாப்புத்துறை, 🌊கடலோர பாதுகாப்புக் 👥குழுமம் உள்ளிட்ட பலரும் தீவிரக் 👀கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் ராமநாதபுரம், ஏர்வாடி அருகே, 🌊கடலோர 👮காவல்படை அதிகாரிகள் இன்று அதிகாலை 🚗வாகன 👀சோதனை நடத்தினர். அப்போது அது வழிவந்த காரை மறித்து🚫 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 🚗காரில் இருந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்திச் சென்றது தெரியவந்தது😳. இது தொடர்பாக தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 👨சம்சுதீன் என்பவரை எஸ்.ஐ-கள் அய்யனார், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 👮போலீஸார் கைது⛓ செய்து விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோதமாக கடத்திச் சென்ற 510 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment