பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுடன் புதுவை முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி சந்திப்பு - Agnipuratchi

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுடன் புதுவை முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி சந்திப்பு

Share This

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை திண்டிவனத்தையடுத்த  தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதுவை மாநில முன்னாள் முதலமைச்சரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான  என்.ரங்கசாமி இன்று காலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் வி.பாலன், செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபாலன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சபாபதி ஆகியோரும் மருத்துவர் அய்யா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது புதுவை மாநில பா.ம.க.பொறுப்பாளர் முனைவர் கோ.தன்ராஜ், நிர்வாகிகள் மதி, கணபதி, ஜெயபால், சிவா, புருஷோத்தமன், சத்தியா ரெட்டியார் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages