மாவட்டம் விட்டு மாவட்டம் பணி இடமாறுதல் உத்தரவு⚖ குறித்து 🇮🇳இந்திய 🗳தேர்தல் ஆணையம்🔈 - Agnipuratchi

மாவட்டம் விட்டு மாவட்டம் பணி இடமாறுதல் உத்தரவு⚖ குறித்து 🇮🇳இந்திய 🗳தேர்தல் ஆணையம்🔈

Share This

நாடாளுமன்ற 🗳தேர்தலையொட்டி ஒரே இடத்தில் 📆3 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்ற 🗳தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது⚖. இதன்பேரில் 🏛தமிழகத்தில் பணியிட மாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது😯. இதில், கடந்த 📆வாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், உதவிஇயக்குநர்களை மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு இடமாற்றம்🙄 செய்து உத்தரவிட்டனர்⚖. இதனையடுத்து, 📆3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்திலும், சொந்த ஊரிலும் பணியாற்றி வரும் அதிகாரிகளை அந்தந்த 🏛மாவட்டத்திற்குள் மாற்றிக்கொள்ள வேண்டும். மாறாக மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு மாற்றியதை ஏற்க முடியாது🚫 எனக்கூறி ஊராக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை 🤵அலுவலர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில்💪 ஈடுபட்டனர். இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இடமாறுதல் தொடர்பாக விளக்கம்🗣 கேட்டு கடிதம் அனுப்பியது. அதற்கு 🇮🇳இந்திய தேர்தல் ஆணையம் பதில் கடிதத்தை தமிழக தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ளது. அதில், ஒரு மாவட்டத்தில் ஒரே இடத்தில் 📆3, 4 ஆண்டுகள் பணியாற்றும் அதிகாரிகளையும், சொந்த ஊரில் பணியாற்றும் அதிகாரிகளையும் மாவட்டத்திற்குள்ளேயே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்👍. மாநில அளவிலான அதிகாரிகளை மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு மாற்றிக்கொள்ளலாம் என அறிவுறுத்தியது🗣 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages