🗳தேர்தல் பணியினை புறக்கணிப்போம்🙄-👮ஊர்க்காவல் படையினரின் அதிரடி - Agnipuratchi

🗳தேர்தல் பணியினை புறக்கணிப்போம்🙄-👮ஊர்க்காவல் படையினரின் அதிரடி

Share This

🏛தமிழகத்தில் 👮போலீசாருக்கு இணையாக ஊர்க்காவல் படையினர் 👥பொதுக்கூட்டம், கோயில் திருவிழா🎉 உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்👍. முன்பு மாதந்தோறும் 25 நாட்கள் வேலை நாள் ஒன்றுக்கு 💸150 ஊதியம் என்று இருந்தது. கடந்த 📆2017ம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி⚖ 8 மணிநேரம் வேலை, பணி நாளில் 💸560 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது😯. ஆனால் 📆மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, வேலை நாட்களை அதிகரிக்க⏫ வேண்டும், இரண்டாம் நிலை 👮காவலருக்கு இணையான 💸ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 🙏கோரிக்கைகளை இவர்கள் தொடர்ந்து 🏛தமிழக அரசிடம் வலியுறுத்தி😳 வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை😟. இந்நிலையில், 👮ஊர்க்காவல் படையினர்🎙, "வருவாயை மாதந்தோறும் வழங்கவேண்டும். மாதத்தில் எல்லா நாட்களும் வேலை வழங்க வேண்டும்💪. அரசு இந்த 🙏கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வரும் நாடாளுமன்ற 🗳தேர்தல் பணிகளை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம்😱" என்று அறிக்கை📣 விடுத்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages