திமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு - Agnipuratchi

திமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு

Share This

நாடு முழுவதும் விரைவில் 👥மக்களவை 🗳தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் 🤝கூட்டணிப் பேச்சுவார்த்தையில்🗣 ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, 🌞திமுக தலைமையில் மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன😯. இவர்களிடம் தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை🗣, திமுக ஏற்கனவே முடித்து வைத்திருந்தது. இதையடுத்து நேற்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை🗣 நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பல்வேறு காரணங்களால் கலந்து கொள்ளவில்லை😟. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி உடன் நடைபெற்றது👍. சுமார் ⌚அரை மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது👏. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது🎉. அதன்படி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் அல்லது திருவள்ளூர் தொகுதிகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது🗣. அதே போல், திமுக-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், 2 தொகுதிகள் ஒதுக்கீடு👍 செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னர் அறிவிப்பார்🔈 என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages