தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பது குறித்த வழக்கு😯-💺ஆட்சியருக்கு உத்தரவு - Agnipuratchi

தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பது குறித்த வழக்கு😯-💺ஆட்சியருக்கு உத்தரவு

Share This

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த 👨காட்டுராஜா என்பவர், 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 🌊தாமிபரணியில் கழிவு நீர் கலப்பது குறித்து புகார் மனு📜 அளித்துள்ளார். அதில் அவர், "ராமையன்பட்டி ஊராட்சி பகுதியில் நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான 🛣150 ஏக்கரில் குப்பைகள் கொட்டப்படுகிறது. மழைக்காலங்களில் குப்பை மேட்டிலிருந்து வரும் கழிவுநீர், அருவன்குளம் கால்வாய் வழியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது😳. இதனால் தாமிரபரணி ஆறு அசுத்தம் அடைந்து வருகிறது😟. எனவே குப்பையை அகற்றவும், இனிமேல் அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு தடை🚫 விதித்தும் நீதிமன்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை🗣 நேற்று நடந்த நிலையில், 🏛நெல்லை மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க ⌚காலஅவகாசம் கோரப்பட்டது.இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "🌊தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடைசெய்ய🚫 நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு💪 தர வேண்டும். இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது⁉என்பது குறித்து விளக்கமளிக்க🗣 நெல்லை மாவட்ட 💺கலெக்டர், மாநகராட்சி 👮ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும்" என்று உத்தரவிட்டு⚖ விசாரணையை 📆மார்ச் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages