பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை அமைச்சர்கள் சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் சந்தித்து வண்டலூர் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். - Agnipuratchi

பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை அமைச்சர்கள் சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் சந்தித்து வண்டலூர் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

Share This

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை  தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில்  தமிழக சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி. சண்முகம் அவர்களும், உயர்கல்வித்துறை அமைச்சரும், தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி. அன்பழகன் அவர்களும் இன்று (05.03.2019) மாலை சந்தித்து பேசினார்கள்.

அப்போது நாளை பிற்பகல் சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெறவுள்ள அதிமுக தலைமையிலான கூட்டணியின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தனர்.

அப்போது தமிழக முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான  எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தொலைபேசி மூலம் மருத்துவர் அய்யா அவர்களை தொடர்பு கொண்டு நாளையக் கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதிமுக சார்பிலான அவர்களின் அழைப்பை மருத்துவர் அய்யா அவர்கள் ஏற்றுக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளரும், உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான குமரகுரு உள்ளிட்ட  இரு கட்சிகளின் நிர்வாகிகள்  உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages