தொல்லியல் சின்னங்களைச் சுற்றி குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது🚫-🏛உயர்நீதிமன்ற மதுரை கிளை - Agnipuratchi

தொல்லியல் சின்னங்களைச் சுற்றி குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது🚫-🏛உயர்நீதிமன்ற மதுரை கிளை

Share This

🏛தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, பரம்பு, ஆதிச்சநல்லூர், திண்டுக்கல் மாவட்டம் பழநி உள்ளிட்ட பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிட⚖ கோரி🙏 வழக்குகள் தொடரப்பட்டன. சில பகுதிகளில் 🏘குடியிருப்புக்களும், 🌾விளை நிலங்களும் இருப்பதாக விசாரணையின்🗣 போது அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்🔈. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்தி 🌎பூமியின் அடிபரப்பில் தொல்லியல் பொருட்கள் உள்ளதா என ஏன் கண்டறிய கூடாது❓என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அறிக்கை தாக்கல்📜 செய்ய தமிழக தொல்லியல் துறைக்கும் உத்தரவிட்டனர்⚖. இதனையடுத்து, 🏛தமிழகத்தில் தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை, அறிவிக்கப்பட உள்ளவை, அகழ்வாராய்ச்சி நடைபெற உள்ள இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மணல், கல் குவாரிகளுக்கு மாவட்ட 💺ஆட்சியர்கள் அனுமதி வழங்கக்கூடாது🚫 எனவும், தொல்லியல் துறை சார்பில் தகவல் பலகை வைக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை🗣 4 வாரங்களுக்கு📆 ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages