👥மக்களவை 🗳தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தினகரன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் 2வது நாளான இன்றும் விசாரணை🗣 நடந்து வருகிறது. டிடிவி.தினகரன் சார்பில் வழக்கறிஞர் 🤵கபில் சிபல் ஆஜராகி தனது வாதத்தை முன் வைத்தார். இதனையடுத்து "சுயேச்சைகளுக்கு ஒதுக்குவது போல பொது சின்னங்களில் ஒன்றை டிடிவி கட்சிக்கு ஒதுக்குங்கள்👍" என்று யோசனை🤔 அளித்தார் 🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 🤵ரஞ்சன் கோகோய். அதனை தொடர்ந்து பேசிய அவர்🎙, "ஏனெனில் 👤ஒருவர் எவ்வளவு வலுவுள்ளவராக இருந்தாலும் அவருக்கு அடையாளம் அவரது சின்னம் தான்😳. எனவே வேட்பு 📜மனுத்தாக்கல் நிறைவடைந்த பிறகு டிடிவி கட்சிக்கு பொதுவான சின்னம் ஒன்றை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாமே🗣" என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் விசாரணையின் போது வாதிட்ட 🗳தேர்தல் ஆணையம், அமமுக சார்பில் போட்டியிடுவோர் அனைவரும் சுயேச்சைகள் என்பதால் பொதுசின்னம் ஒதுக்க முடியாது🚫 என்றும், மாறாக தனித் தனி சின்னமே ஒதுக்க முடியும்🙄 எனவும் வாதிட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை 🤵நீதிபதி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒருவருக்கு தருமாறு ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா❓என கேள்வி எழுப்பினார். ஒரு அரசியல் கட்சிக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு ஆணையத்துக்கு 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும்⚖ என வழக்கறிஞர் கபில் சிபல் பதில்🗣 அளித்தார் என்று செய்திகள் தெரிவிக்கிறது🔈.
அமமுக 👥வேட்பாளர்களுக்கு தனித் தனி சின்னமே ஒதுக்க முடியும்😳-தேர்தல் ஆணையம்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment