🚆ரயில் விபத்து, திருட்டு சம்பவங்களை தடுக்க🚫 புதிய 📲'ரூட் மேப்பிங்' திட்டம்🎉 - Agnipuratchi

🚆ரயில் விபத்து, திருட்டு சம்பவங்களை தடுக்க🚫 புதிய 📲'ரூட் மேப்பிங்' திட்டம்🎉

Share This

ஆண்டுக்காண்டு 🚆ரயில் விபத்துகளில் உயிரிழப்போரின்😳 எண்ணிக்கை அதிகரித்து⏫ வரும் நிலையில், 🚆ரயில் விபத்துக்களையும் 💸திருட்டு சம்பவங்களையும் தடுக்கும்🚫 வகையில் 📲"ரூட் மேப்பிங்" என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த 🏛தமிழக ரயில்வே 👮காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 📆10 ஆண்டுகளில் 🚆ரயில் விபத்துக்களில் இறந்தவர்களின் வழக்கு விவரங்களைச் சேகரித்து, விபத்து நடந்த இடம் மற்றும் திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள் மேப்பிங் பாய்ண்ட் என்று குறிப்பிட்டு அடையாளப்படுத்தப்படும்😯, எந்த இடத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறதோ🙄 அங்கு எச்சரிக்கை⚠ அறிவிப்புகள், தடுப்புக் கட்டைகள் போன்றவை அமைக்கப்படும்👍. திருட்டைத் தடுக்க🚫 போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 🏛தமிழகத்தில் சென்னை, திருச்சி ஆகிய இரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள ரயில்வே 👮காவல்துறையின் கீழ் 48 காவல் நிலையங்களில் 👥1,500 காவல்துறையினர் பணியில் இருப்பதாகவும் அவர்களை வைத்து, இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் டிஐஜி 👮பாலகிருஷ்ணன் தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages