மதுரை சித்திரை திருவிழாவுக்காக🎉 தேர்தல் 📆தேதியை மாற்ற முடியாது🚫-தேர்தல் ஆணையம்🗣 - Agnipuratchi

மதுரை சித்திரை திருவிழாவுக்காக🎉 தேர்தல் 📆தேதியை மாற்ற முடியாது🚫-தேர்தல் ஆணையம்🗣

Share This

🏛தமிழகத்தில் நாடாளுமன்றத் 🗳தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 🗳இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக 📆ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு🔈 வெளியிட்டுள்ளது. ஆனால், அதே 📆தினத்தில் மதுரையில் சித்திரைத் திருவிழா🎉 நடைபெற உள்ளது. எனவே, மதுரையில் தேர்தலை தள்ளி வைக்க 🙏கோரி, சென்னை 🏛உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் 🤵பார்த்தசாரதி என்பவர் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பாக விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, "மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் என்பதற்காக மக்களவைத் தேர்தல் தேதியை மாற்ற முடியாது" என்று கூறிய தேர்தல் ஆணையம், "🗳வாக்குப்பதிவு நேரத்தை வேண்டுமானால் கூடுதலாக ⌚2 மணி நேரம் நீட்டிக்கிறோம். 💪பாதுகாப்பிற்காக அண்டை 🏛மாநிலத்தில் இருந்து கூட 👮போலீசார்களை வரவழைத்து தேர்தலை நடத்துவோம்😳" என்று தெரிவித்தது🔈. 
இதனையடுத்து இது குறித்து நீதிபதிகள் பேசுகையில்🎙, "மதுரை தேரோடும் வீதியில் மட்டும் 51 வாக்குச்சாவடிகள் உள்ளன😯. அப்படி இருக்கையில் அந்த 51 வாக்குச்சாவடிகளில் 👥மக்கள் எப்படி வாக்களிப்பர்⁉. பொதுமக்கள் மட்டுமின்றி 👮அரசு அதிகாரிகளும் திருவிழாவுக்காக ஊருக்குச் செல்வர். தேர்தல் ஆணையத்தின் பதிலில் திருப்தியில்லை🚫. முறையாக பதிலளிக்க தவறினால் தலைமை தேர்தல் 🤵அதிகாரி ஆஜராக நேரிடும்😱. நாளை பதிலை 📜மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு⚖ வழக்கினை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages