தனியார் 🏫பள்ளிகளில் விடுமுறை நாளில் வகுப்புகள் நடத்தக்கூடாது🚫-🏫மெட்ரிக் பள்ளிகள் 🤵இயக்குனர் - Agnipuratchi

தனியார் 🏫பள்ளிகளில் விடுமுறை நாளில் வகுப்புகள் நடத்தக்கூடாது🚫-🏫மெட்ரிக் பள்ளிகள் 🤵இயக்குனர்

Share This

🗳மக்களவைத் தேர்தல் காரணமாக 🏫பள்ளிகளுக்கு 📆ஏப்ரல் 12ம் தேதிக்குள் ✍தேர்வுகளை முடிக்க வேண்டுமென 🏫பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது⚖. அதன்படி தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன😯. இதனையடுத்து தேர்வுகள் முடிவடைந்த பிறகு 🏫பள்ளிகளுக்கு ஏப்ரல் 13 முதல் ஜூன் 2ம் தேதி வரை 📆50 நாள்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் உட்பட எந்த பள்ளிகளிலும் விடுமுறை நாளில் 👥மாணவர்களுக்கு கோடை வகுப்புகள் நடத்தக்கூடாது🚫 என 🤵பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்⚖. "வெப்பம்🌞 அதிகமாக⏫ இருப்பதன் காரணமாக மாணவர்களுக்கு நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளதால்😳 எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்த வேண்டாம்😐, அவர்களுக்கு கட்டாயம் ஓய்வு அளித்திட வேண்டும்👍" என அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த உத்தரவை⚖ மீறும் பள்ளிகள் மீது பெற்றோர் புகார் அளித்தால்✍ தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்😡 எனவும் எச்சரித்துள்ளார்⚠.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages