தமிழகத்தில் தேர்தல் வருவதையடுத்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 🗳தேர்தல் 🤵அதிகாரி🎙 - Agnipuratchi

தமிழகத்தில் தேர்தல் வருவதையடுத்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 🗳தேர்தல் 🤵அதிகாரி🎙

Share This

🗳தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் 🏛தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரதா சாஹூ 📰செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்🎙, " 🏛தமிழகத்தில் 7,780 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை😨 என்று கண்டறியப்பட்டுள்ளது. 📆18ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்காக 💪பாதுகாப்பு பணியில் 63,951 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 👮27,400 போலீசார் தயார் நிலையில் இருக்கிறார்கள். வாக்களித்தவர்களுக்கு அடையாள மை வைப்பதற்காக 💸ரூ.2.5 கோடி செலவில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 700 மை பாட்டில்கள் வாங்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிக்கு 2 பாட்டிகல் வீதம் இவை அனுப்பப்படும்😯" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்🎙, "பறக்கும் படை சோதனையில் உரிய 📄ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதாக இதுவரை 💰ரூ.122.29 கோடி ரொக்கமும் 🏅812 கிலோ தங்கமும் 482 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றும், "🗳தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 1,576 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது😳. இன்று 09.04.2019 மாலை ⌚6 மணி வரை கருத்துக்கணிப்புகளை🎯 வெளியிடலாம். வாக்குப்பதிவிற்கு ⌚48 மணி நேரம் முன்பு வரை 📺தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடலாம்👍" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages