🏛நீதிமன்ற அவமதிப்பு வழக்கு-மீண்டும் ராகுல் காந்திக்கு 🏛உச்சநீதிமன்றம் நோட்டீஸ்📜 - Agnipuratchi

🏛நீதிமன்ற அவமதிப்பு வழக்கு-மீண்டும் ராகுல் காந்திக்கு 🏛உச்சநீதிமன்றம் நோட்டீஸ்📜

Share This

சமீபத்தில்  🛩ரபேல் விவகாரம் குறித்த தீர்ப்பு குறித்து ராகுல் காந்தி 📰செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 👮காவலாளி என கூறிக் கொள்பவர் திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டது😱" என்று தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையினை😨 ஏற்படுத்தியது. ராகுல் காந்தி இவ்வாறு பேசியதற்கு எதிராக பா.ஜ.க.வைச் சேர்ந்தவரும், டெல்லி எம்.பி.யுமான மீனாட்சி லெகி, 🏛உச்சநீதிமன்றத்தில் கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்😯. இது குறித்த விளக்கத்தினை ராகுல் காந்தி நேற்று, "🛩ரபேல் வழக்கில் 🏛நீதிமன்ற தீர்ப்பின் போது, பிரச்சாரத்தில் இருந்தபோது பேசிவிட்டேன்😟. ஆனால், தீர்ப்பின்⚖ சாரம்சம் தெரியாமல் பேசிய என்னுடைய வார்த்தைகளை எதிர்க்கட்சிகள் தவறாகப் பயன்படுத்திக்கொண்டன🙄. நீதிமன்றத்தின் உத்தரவுகளை, மாண்புகளை மதிக்காதவகையில் செயல்பட வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை🚫” என்று தெரிவித்து இருந்தார். ஆனால் இன்று நடந்த விசாரணையில், 🏛உச்சநீதிமன்றம், ராகுல் காந்தி அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை😳 என கூறியது. மேலும் ராகுல் காந்தி தனது விளக்கத்தை🗣 மீண்டும் அளிக்குமாறு கூறியதோடு விசாரணையை வரும் 📆30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. ரபேல் வழக்கில் சீராய்வு மனுக்களும் அன்றைய தினம் விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது🗣 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages